Welcome To காவேரி மஹா புஷ்கரம்

இயற்கைத் தாய் நமக்களித்த ஒப்பற்ற வரப்பிரஸாதம் நீர் , இந்த நீர் மனிதவளத்தை மேம்படுத்த முக்கிய காரணமாய் விளங்குகிறது. நம் இந்தியத் திருநாட்டில் வற்றாத ஜீவநதிகளான கங்கை , யமுனை, பிரம்மபுத்திரா , கோதாவரி , கிருஷ்ணா மற்றும் காவேரி போன்ற நதிகள் நாட்டைப் புனிதமாக்கி மக்கள் வாழ வழிசெய்கின்றன .

இந்த புனித நதிகள் நீரின்றி அமையாது உலகு என்பற்கேற்ப, நம் தாகத்தை நீக்குவத்தோடல்லாமல் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன் , தனது இரு கரைகளிலும் உள்ள நிலங்களையும் வளப்படுத்தி பயிர்கள் மற்றும் மரம் செடி , கொடிகள் வளர் உதவுகின்றன .

ஞானத்திற்கு குருவான பிருஹஸ்பதி (வியாழன்) சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் ஒன்றாகும் . இந்த காலச் சக்கரம் சுழலும் பொழுது ஒவ்வொரு நதிக்கும் பன்னிரண்டு (12) வருடங்களுக்கு ஒருமுறை புஷ்கரம் வருகிறது.